Sunday, July 3, 2011

ரியாத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 6 இந்தியர்கள் மரணம்-பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்

sau_riyadh-fire
ரியாத்:சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதின் மையப்பகுதியான பத்தாவில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் மார்க்கெட்டில் அல் ஸாலிம் சூப்பர்மார்க்கெட்டின் மேல் மாடியில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 இந்தியர்கள் உள்பட 7 பேர் மரணித்துள்ளனர்.அதிகாலை 2 மணிக்கு இவர்கள் தங்கியிருந்த சமையலறை பகுதியிலிருந்து தீ பரவியது.சவூதி தீயணைப்பு படையும், ரெட் க்ரஸெண்டும் வந்து இறந்த உடல்களை வெளியே எடுத்தனர்.இறந்த உடல்கள் ரியாத் சுமைஸி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டன.

கேரளாவைச்சார்ந்த 5 நபர்கள், கர்நாடகாவைச்சார்ந்த ஒருவர் மற்றும் நேபாளத்தைச்சார்ந்த ஒருவரும் இந்த தீவிபத்தில் இறந்துவிட்டனர். கோழிக்கோட்டைச் சார்ந்த முஹம்மது அலி தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பத்து அறைகளில் 50 பேர் தங்கியிருக்கும் நிறுவனத்திற்கு சொந்தமான வசிப்பிடத்தில்தான் இந்த தீவிபத்து ஏற்பட்டது.

மரணித்த ஆறு பேரின் உடல்களையும் இந்தியாவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அஹ்மத் கூறுகையில், ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ஆறு பேரின் உடல்களும் இந்திய அரசின் செலவில் தாயகம் கொண்டு வரப்படும் என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza