மும்பை: வெளிநாடுகளில் கறுப்புப் பணம் பதுக்கிய வழக்கில் பிரபல தொழிலதிபர் ஹஸன் அலிக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் மறுத்துவிட்டது.
வெளிநாட்டு வங்கிகளில் 93 மில்லியன் டாலர் (ரூ.419 கோடி) பதுக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், புனே குதிரைப்பண்ணை உரிமையாளர் ஹசன் அலிகானும், அவருடைய கூட்டாளி காசிநாத் தபுரியாவும் கடந்த மார்ச் மாதம் அமலாக்கப் பிரிவால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் ஜாமீன் கோரி, மும்பை முதன்மை செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
அவர்களுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கப்பிரிவு வக்கீல் உஜ்வால் நிகாம் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, ஹசன் அலி, தபுரியா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி ஸ்வப்னா ஜோஷி உத்தரவிட்டார்.

0 கருத்துரைகள்:
Post a Comment