Thursday, June 16, 2011

சுவாமி நிகமானந்தா மரணம்! பாஜக அரசு ராஜினாமா செய்யுமா?

கங்கை நதியை சுத்தப்படுத்தக் கோரி சுமார் 4 மாதங்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த சுவாமி நிகமானந்தா உயிரிழந்ததற்கு, மாநில அரசின் புறக்கணிப்பு தான் காரணம் என்றும், அதற்கு பொறுப்பு ஏற்று உத்தரகாண்ட் முதல்வர் நிஷாங்க் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கிஷோர் உபாத்யாய் கூறியுள்ளதாவது, "சுவாமி நிகமானந்தாவுக்கு உரிய மருத்துவ வசதிகளை செய்ய மாநில அரசு தவறிவிட்டது. இதன் மூலம், முதல்வர் நிஷாங்க் தலைமையிலான பாஜக அரசு தனது கடமையில் இருந்து விலகியுள்ளது. எனவே, நிகமானந்தாவின் உயிரிழப்புக்கு பொறுப்பு ஏற்று முதல்வர் நிஷாங்க் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றார்.

சுவாமி நிகமானந்தா உயிரிழந்தது குறித்து மாநில அரசு தனி விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளுநர் மார்கரெட் ஆல்வா கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே, இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza