Sunday, June 12, 2011

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக பிரச்சாரம்!

கருப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் ஆகியோரின் பின்னணியில் உள்ள ஹிந்துத்துவா பயங்கரவாத சக்திகள் உள்ளதை நாட்டு மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஞாயிறு முதல் நாடுதழுவிய பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர வலியுறுத்தி பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இதேபோல் ஊழக்கு எதிராக அன்னா ஹசாரேவும் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இவர்கள் பின்னணியில் ஹிந்து தீவிரவாத இயக்கமான ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அரசியல் முகமூடி பாஜக உள்ளிட்ட தீவிர ஹிந்து மதவாத சக்திகள் உள்ளதாக காஙகிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதனை நாட்டு மக்களுக்கு விளக்கும் வகையில் ஞாயிறு முதல் நாடு தழுவிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்போவதாக காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முதல் பிரச்சாரத்தை கொல்கத்தாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நிதி அமைச்சருமான பிரணாப் முகர்ஜி தொடங்கி வைக்கிறார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza