Thursday, June 9, 2011

இது நக்சலைட் படை அல்ல; தேசியவாத படை: ராம்தேவ்

நான் அமைப்பது நக்சலைட் படை அல்ல; தேசியவாத படை என்று பிரபல யோகா சாமியார் பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த யோகா குரு ராம்தேவை டெல்லி போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதைத் தொடர்ந்து, ஹரித்துவாரில் உள்ள தனது ஆசிரமத்திலேயே ராம்தேவ் 5 நாளாக உண்ணாவிரதத்தை ராம் தேவ் தொடர்ந்து வருகிறார்.

தவிர, அடுத்தமுறை போராட்டத்துக்கு வருபவர்கள் ஆயுதங்களுடன் வரவேண்டும் என்றும் ராம்தேவ் கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. ஆயுதப் படை அமைப்பதாக இருந்தால் சட்டம் தனது கடமையை செய்யும் என்று உள்துறை மந்திரி ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்தார். இது தேச விரோத நடவடிக்கை என்றும் மத்திய அரசு நடவடிக்கை என்றும் மத்திய மந்திரி நாராயண சாமி தெரிவித்தார்.

இந்த நிலையில், தன்னுடைய அறிவிப்பு குறித்து யோகா குரு ராம்தேவ் இன்று விளக்கம் அளித்தார். தீவிரவாதிகளையோ, நக்சலைட்டுகளையோ, மாவோயிஸ்டுகளையோ நான் உருவாக்கப் போவதில்லை. நாட்டின் நலன்களை பாதுகாக்கும் தேசியவாத படையை மட்டுமே நான் அமைக்கப்போகிறேன் என்று ராம்தேவ் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza