Wednesday, June 8, 2011

கார்ப்பரேட் சந்நியாசி மேல் நடவடிக்கை வேண்டும்! திமுக!

யோகா குரு ராம்தேவ் சொத்துக்கள் பற்றி விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக வலியுறுத்தி உள்ளது.

டெல்லியில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரம் இருந்த ராம்தேவை போலீசார் வெளியேற்றினர்.

இதையடுத்து ஹரிதுவாரில் ராம்தேவ் உண்ணாவிரதம் மேற்கொண்டார். நான் உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ராம்தேவ் சொத்துக்கள் பற்றி விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழு செயலாளர் ஆதிசங்கர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பாபா ராம்தேவ் ஒரு கார்ப்பரேட் சந்நியாசி போல் நடந்துகொள்கிறார். ராம்தேவின் நிதி தொடர்பான நடவடிக்கைகள் பற்றியும், திரண்ட சொத்துக்கள் பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza