அமெரிக்காவில் உள்ள சிகாகோ கோர்ட்டில் நடைபெற்று வருகிற பயங்கரவாதிகள் மீதான வழக்கு விசாரணையில் அமெரிக்கா நேற்று (திங்கள்) இரண்டாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.கடந்த 2008ம் ஆண்டு மும்பையில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட, 166 பேர் பலியாயினர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த அமெரிக்க வாழ் பாகிஸ்தானியரான, டேவிட் கோல்மேன் ஹெட்லியை, அமெரிக்க காவல்துறையினர், 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம், சிகாகோவில் கைது செய்தனர். ஹெட்லி மீது சிகாகோ கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யபட்டது.
ஹெட்லி கொடுத்த தகவலின் பேரில், மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு உதவிய மேலும் நான்கு பேர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யபட்டுள்ளது. மேலும் அந்த ஆதாரங்கள் அடங்கிய முழு விபரங்களையும் அமெரிக்கா இந்தியாவுக்கு அனுப்பிவைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை தாக்குதலில் ஈடுப்பட்டதாக கூறப்படும், ஹெட்லி உட்பட ஐந்து பேரின் முழு விபரத்தையும், அவர்களது புகைப்படத்துடன் இந்தியா வெளியிட்டுள்ளது. இதில் மாஜித் இக்பால் ,ஷாஹித் மஜீத் ,அபு குவாபா, மற்றும் ஐ.எஸ்.ஐ. அதிகாரி மேஜர் இக்பால் ஆகிய 4 பயங்கரவாதிகள் இடம்பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவ மேஜர் சமீர் அலி என்பவரும், மேஜர் இக்பால் என்பவரும் மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்ட, ஹெட்லிக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் இன்டர்போல் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

0 கருத்துரைகள்:
Post a Comment