கேரளாவிலிருந்து சரக்கை ஏற்றிக்கொண்டு, மும்பைக்குச் சென்று கொண்டிருந்த கப்பலில், நடுக்கடலில் திடீரென்று தீ பற்றிக் கொண்டது. அதிஷ்டவசமாக கப்பல் ஊழியர்கள் பாதிப்பு ஏதுமின்றி உயிர் பிழைத்தனர்.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சரக்கு ஏற்றிக் கொண்டு, 'எம்.வி.ஓர்கிட்' என்ற சரக்கு கப்பல் மும்பைக்கு புறப்பட்டது. கண்ணூர் அருகே நடுக்கடலில் கப்பல் சென்று கொண்டிருந்த போது, தீடீர் என்று கப்பலில் தீப்பிடித்தது.
உடனே கப்பலிலிருந்து, கொச்சி துறைமுகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொச்சி மற்றும் மங்களபுரத்தில் இருந்து, இந்திய கடற் படை வீரர்கள் விரைந்து சென்று கப்பலில் தீயை அணைத்தனர்.
விரைந்து செயல்பட்டு தீ அணைக்கப்பட்டதால், கப்பலுக்கு பெரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை. கப்பல் ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக பாதிப்பு ஏதுமின்றி உயிர் பிழைத்தனர்.

0 கருத்துரைகள்:
Post a Comment