Wednesday, May 11, 2011

லிப்ய ராணுவத்தால் பாதிக்கப்பட்ட பெண் துனிசியாவுக்கு தப்பினார்

libya
லிபியாவை சேர்ந்த பெண் இமான் அல்-ஒபீதி. இவர் திரிபோலியாவில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த வெளிநாட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார். தன்னை கடாபியின் ராணுவ வீரர்கள் 15 பேர் கடத்தி சென்று ஒரு அறையில் அடைத்து வைத்து 2 நாட்களாக கற்பழித்தனர் என்று புகார் கூறினார்.
 
இதனால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு ராணுவத்தின் அச்சுறுத்தல் இருந்து வந்தது. இந்நிலையில் அவர் திரிபோலியில் இருந்து தப்பி போராட்டக்காரர்கள் வசம் இருக்கும் தெகிபா எல்லை வழியாக துனிசியா நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.
 
இதற்காக அவருக்கு நல்ல மனம் படைத்த ராணுவ அதிகாரி ஒருவர் உதவி செய்தார். தனது அடையாள அட்டை உதவியுடன் அவரை காரில் பத்திரமாக அழைத்து சென்று போராட்டக் காரர்கள் வசமிருக்கும் பகுதியில் சேர்த்தார். அப்போது இமான் அல்- ஒபீதி மலைவாழ் இன பெண் போன்று தனது உருவத்தை மாற்றி இருந்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza