லிபியா தலைநகர் ட்ரிபோலி துறைமுகம் அருகே கப்பல் கவிழ்ந்ததில், 600 பேர் மூழ்கினர். சிலர் நீந்தி கரையேறினர். கடலில் மிதக்கும் சடலங்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
லிபியாவில் அதிபர் கடாபி பதவி விலக வேண்டும் என மக்கள் போராடி வருகின்றனர். அவர்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்த கடாபி உத்தரவிட்டார். இதனால் லிபியா ராணுவத்தின் மீது நேட்டோ படை தாக்குதல் நடத்தி வருகிறது.
உள்நாட்டில் உள்ள போராட்டக்காரர்களும் லிபியா ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் லிபியாவில் தங்கியுள்ள மக்கள் அருகில் உள்ள நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். தலைநகர் ட்ரிபோலியில் உள்ள து¬முகத்தில் இருந்து நேற்று புறப்பட்ட கப்பல் பாரம் தாங்காமல் கடலில் கவிழ்ந்தது. அப்போது, சிலர் நீந்தி கரையேறினர். குழந்தைகள், பெண்கள் உள்பட பலர் இறந்தனர்.
கடலில் மூழ்கியவர்களை மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர். மிதக்கும் சடலங்களை மீட்டு கரைக்கு கொண்டு வரும் பணியும் தீவிரமாக நடக்கிறது. நூற்றுக்கணக்கானவர்கள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஐ.நா அகதிகள் மீட்பு குழு இதுவரைக்கும் 16 உடலை மீட்டுள்ளது.அதில் இரு குழந்தைகளும் அடக்கம். கடாஃபிக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் லிப்ய வான் எல்லையில் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.
லிப்யாவை தாக்கும் பணி யு.எஸ் தலைமையிலான படையிலிருந்து நேடோ படைக்கு மாற்றப்பட்டுள்ளது. எகிப்து மற்றும் துனிசியா துவங்கப்பட்ட மக்கள் எழுச்சி லிப்யாவை தாக்கியது. தற்போது சிரியா, பஹ்ரைனில் மக்கள் போராட்டம் நடைபெற்றுவருகின்றது

0 கருத்துரைகள்:
Post a Comment