Wednesday, May 11, 2011

நானாவதி-மேத்தா கமிஷன் சஞ்சீவ் பட்டை குறுக்கு விசாரணை செய்ய அனுமதித்துள்ளது

sanjeev bhat
காந்திநகர்:2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் அதன் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் நானாவதி-மேத்தா கமிஷன் நரமோடிக்கு எதிராக பிரமாண பத்திரம் தாக்கல் செய்த சஞ்சீவ் பட்டை குறுக்கு விசாரணை செய்ய கடந்த திங்கட்கிழமை அன்று ஜன் சங்கர்ஷ் மன்ச் எனும் மனித உரிமை அமைப்பிற்கு அனுமதியளித்துள்ளது.

குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடும் ஜன் சங்கர்ஷ் மன்ச் கலவரத்தில் மோடியின் தொடர்பு குறித்து சஞ்சீவ் பட்டிடம் குறுக்கு விசாரணை செய்ய மனு அளித்திருந்தது. தேவங் வியாஸ் என்னும் மாநில வழக்கறிஞர்  ஜன் சங்கர்ஷ் மன்ச்சிர்க்கு பட்டை விசாரிக்க உரிமையில்லை என வாதிட்டார். ஆனால் ஜன் சங்கர்ஷ் மன்ச்சின் வழக்கறிஞர்  முகுல் சின்ஹா அதற்கு கண்டனம் தெரிவித்தார்.

அரசு குறுக்கு விசாரணையை ஆதரிக்க வேண்டும் என வாதிட்டார். எனவே G .T .நானாவதி மற்றும் அக்க்ஷய் மேத்தா ஆகியோர் அடங்கிய குழு ஜன் சங்கர்ஷ் மன்ச்சிர்க்கு பட்டை குறுக்கு விசாரணை செய்ய அனுமதியளித்துள்ளது. முன்னதாக பட் பிப்ரவரி-27, 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்புக்கு பின்னர் குஜராத் முதலமைச்சர் மோடி உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகளிடம் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் போது அவர்களுக்கு உதவக் கூடாது என தெரிவித்திருந்தார் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

அதை குல்பர்கா கூட்டு படுகொலையில் முன்னால் காங்கிரஸ் எம்.பி.எஹ்சான் ஜாப்ரி கொல்லப்பட்டது தொடர்பாக அவருடைய மனைவி சகியா ஜாப்ரி கொடுத்த மனுவின் அடிப்படையில் விசாரிக்க முடியாது என்று கூடுதல் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதை தொடர்ந்து ஜன் சங்கர்ஷ் மன்ச் சஞ்சீவ் பட்டின் பிரமான பத்திரத்தை கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து முடிவு செய்ய முக்கியமான ஆதாரமாக கருத வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

இதன் அடிப்படையில் நானாவதி-மேத்தா கமிஷன் மே பதினாறாம் தேதி பட்டை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. அவரிடம் மோடி பிப்ரவரி-27, 2002 ஆம் ஆண்டு தலைமை ஏற்று நடத்திய அவசர கூட்டம் தொடர்பாக விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza