Wednesday, January 12, 2011

சம்ஜோதா எக்ஸ்பிரஸ்:விசாரணை விபரங்களை கேட்கிறது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்,ஜன.12:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புத் தொடர்பான விசாரணை விபரங்களை ஒப்படைக்குமாறு பாகிஸ்தான் இந்தியாவிடம் கோரியுள்ளது.

குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு பங்குள்ளதாக ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் வாக்குமூலத்தை தொடர்ந்து இந்த கோரிக்கையை பாகிஸ்தான் விடுத்துள்ளது.

இந்தியாவின் ஆக்டிங் டெபுட்டி ஹைகமிஷனர் ஜி.வி.ஸ்ரீனிவாஸை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகத்திற்கு வரவழைத்து தென்னிந்திய விவகாரத்துறை இயக்குநர் ஜெனரல் அஃப்ராஸியாப் மெஹ்தி ஹாஷ்மி விரைவில் புலனாய்வு விபரங்களை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

68 பேர் கொலைச் செய்யப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸின் பங்கினைக் குறித்து ஹிந்துத்துவா பயங்கரவாதி சுவாமி அஸிமானந்தா சிறப்பு நீதிமன்றத்தில் அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸில் பயணம் செய்த 42 பாகிஸ்தானிகள் கொல்லப்பட்டிருந்தனர். பாக்.வெளியுறவுத்துறை அமைச்சராகயிருந்த சல்மான் குர்ஷித் இந்தியாவுக்கு வருகை புரிவதற்கு ஒரு தினம் முன்பாக 2007 பிப்ரவரி 18-ஆம் தேதி இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சம்ஜோதா எக்ஸ்பிரசில் குண்டுவெடித்தது.

பூட்டானில் வருகிற பிப்ரவரி 6,7 தேதிகளில் நடைபெறவிருக்கும் சார்க் உச்சிமாநாட்டையொட்டி இந்தியா-பாக்.வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அதற்கு முன்பாக இந்தியா விபரங்களை ஒப்படைக்க வேண்டுமென எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்தவேண்டுமென கடந்த வாரம் பாகிஸ்தான் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் பாகிஸ்தான் சென்றிருந்த வேளையிலும் இதே கோரிக்கையை பாகிஸ்தான் முன்வைத்தது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புத் தொடர்பாக முதல் கட்ட விசாரணையில் முஸ்லிம்கள் மீது பழி சுமத்தப்பட்டது. பின்னர் பாகிஸ்தானைச் சார்ந்த சில அமைப்புகள்தான் காரணமெனக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கில் அநியாயமாக கைதுச் செய்யப்பட்ட பாகிஸ்தானைச் சார்ந்த அஸ்மத் அலி தற்பொழுதும் சிறையில் வாடுகிறார்.
செய்தி:பாலைவனதூது 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza