கார்த்தூம்,ஜன.12:தெற்கு-வடக்கு சூடான் எல்லைப் பகுதியில் பழங்குடியினரும், அரபு நாடோடிகளுக்குமிடையே நடந்த மோதலில் 36 பேர் கொல்லப்பட்டனர்.
தெற்கு சூடானுக்கு சுதந்திரம் அளிப்பதுத் தொடர்பாக விருப்ப வாக்கெடுப்பு 2-வது நாளாக நடைபெற்றுவரும் வேளையில் இந்த மோதல் நிகழ்ந்துள்ளது.
வடக்கு-தெற்கு சூடானிகள் இடையே மோதல் சூழல் நிலவும் அபியாவில்தான் இந்த மோதல் நிகழ்ந்துள்ளது. கார்த்தூம் அரபு நாடோடிகளுக்கு ஆயுதம் வழங்கி வன்முறையை தூண்டுவதாக அபியாவில் தின்க கோக் பழங்குடியின தலைவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதற்கிடையே ஜுபாவில் ஏ.கெ.47 துப்பாக்கிகளைக் கொண்ட நான்கு பெட்டிகளுடன் ஒரு உகாண்டா நாட்டைச் சார்ந்த நபரையும், வடக்கு சூடானைச் சார்ந்த ராணுவவீரர் ஒருவரையும் கைதுச் செய்துள்ளதாக தெற்கு சூடானின் ராணுவச் செய்தித் தொடர்பாளர் ஃபிலிப் ஆக்வார் தெரிவித்துள்ளார்.
ஆனால், வன்முறை மற்றும் ஆயுதங்கள் சிக்கியதுத் தொடர்பான விவகாரங்களில் தங்களுக்கு தொடர்பில்லை என வடக்கு சூடான் ராணுவச் செய்தித் தொடர்பாளர் ஸவார்மி காலித் தெரிவித்துள்ளார்.
விருப்ப வாக்கெடுப்பில் தெற்கு சூடான் மக்கள் சுதந்திரத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் அதனை அங்கீகரிப்போம் என சூடான் அதிபர் உமருல் பஷீர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் தெற்கு சூடானை முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் வடக்கு சூடானிலிருந்து தனியாக பிரிப்பதற்கு மேற்கத்திய சக்திகள் மற்றும் இஸ்ரேல் சூழ்ச்சி செய்வதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்தது.
அபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளம்தான் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. சூடான் நாட்டவர்களுக்கிடையே மோதலை கிளறிவிட்டு ஆயுதங்களை தருவிப்பது யார் என்பதுக் குறித்து மர்மம் நீடிக்கிறது.
செய்தி:பாலைவனதூது
0 கருத்துரைகள்:
Post a Comment