Saturday, January 15, 2011

ஃபலஸ்தீனை சுதந்திர நாடாக அங்கீகரிக்கும் முதல் மேற்கத்திய நாடு நார்வே

ரமல்லா,ஜன.15:ஃபலஸ்தீனை சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாக நார்வே அறிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகளில் ஃபலஸ்தீனை சுதந்திர நாடாக அங்கீகரிக்கும் முதல் நாடு நார்வேயாகும்.

ரமல்லாவில் ஃபலஸ்தீன் பிரதமர் ஸலாம் ஃபாயதுடன் நடந்த சந்திப்பிற்கு பிறகு நார்வேயின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜொனாஸ் கர் ஸ்டோரி இதனை தெரிவித்தார்.

ஃபலஸ்தீனை சுதந்திர நாடாக அங்கீகரிப்பதற்கான ஃபலஸ்தீன் அரசின் முயற்சிகளுக்கு ஆதரவை பிரகடனப்படுத்துகிறோம். அடுத்த செப்டம்பரில் தற்போதைய சூழல்கள் மாறும். சர்வதேச சமூகத்தின் ஒருபகுதியாக ஃபலஸ்தீன் மாறும் என எதிர்பார்ப்பதாக ஸ்டோரி தெரிவித்தார்.

வெளிநாடுகளுக்கு உதவுவதற்கான ஐரோப்பிய நாடுகளின் கமிட்டி அடுத்த ஏப்ரல் மாதம் கூடி ஃபலஸ்தீனுக்கு பொருளாதார, அரசியல் ஆதரவு கிடைக்க உதவுவோம் என ஸ்டோரி தெரிவித்தார்.

ஃபலஸ்தீன் பூமியில் இஸ்ரேலின் சட்டத்திற்கு புறம்பான குடியேற்ற நிர்மாணங்களை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச சமூகம் தலையிடவேண்டும் என ஸலாம் ஃபய்யாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza