Saturday, January 15, 2011

துனீசியா மக்களுக்கு யூசுப் அல் கர்தாவி ஆதரவு

தோஹா,ஜன.15:சில நாடுகளில் மக்கள் பட்டினியால் வாடும்பொழுது அங்குள்ள ஆட்சியாளர்கள் அரசு கருவூலத்தை கொள்ளையடிக்கின்றனர் என சர்வதேச உலமாக்கள் கவுன்சில் தலைவரான பிரபல மார்க்க அறிஞர் டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி தெரிவித்துள்ளார்.

நீதிக்கான போராட்டத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் பங்கேற்க வேண்டும் என கர்தாவி வெள்ளிக்கிழமை நடந்த ஜும்ஆ உரையில் துனிசிய மக்களுக்கு ஆதரவை பிரகடனத்தியவாறு தெரிவித்தார்.

நிரபராதிகளான மக்களை கொன்றுக் குவிப்பதை எவ்விதத்திலும் அங்கீகரிக்க இயலாது. துனீசியாவுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் அந்நாட்டு பிரச்சனையில் மேற்கத்திய நாடுகள் தலையிடக் கூடாது என கர்தாவி எச்சரிக்கை விடுத்தார்.

முஸ்லிம்களுக்கெதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் பிரான்சின் உதவிக்கான வாக்குறுதியை துனீசியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடாது எனக் குறிப்பிட்ட டாக்டர் கர்தாவி பிரான்சிற்கு உள்ளார்ந்த நேர்மை இருக்குமானால் அந்நாடு ஃபலஸ்தீனில் அவதியுறும் மக்களுக்கு உதவ தயாராகட்டும் என தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza