Wednesday, December 1, 2010

இடித்துத் தகர்க்கப்படும் பலஸ்தீன் வீடுகள் - அகதிகளாகும் பலஸ்தீனர்கள்

1967 ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலத்தின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள 1485 பலஸ்தீன் வீடுகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினால் இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளதாகவும், 2009-2010 காலப்பகுதியில் மாத்திரம் 1322 கட்டிடத்தகர்ப்பு உத்தரவுகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையினால் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றும் சமூக அபிவிருத்தி அமையமான அல்-மக்தீஸி தகவல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினால் இப்புதிய கட்டிடத்தகர்ப்பு உத்தரவுகள் யாவும் அமுல்நடத்தப்படும் பட்சத்தில் 1699 குழந்தைகள், 807 பெண்கள் உட்பட 3655 பலஸ்தீனர்கள் தம்முடைய சொந்த இருப்பிடங்களை இழந்து அகதிகளாக இடம்பெயர நேரும் என மேற்படி அமையம் சுட்டிக்காட்டியுள்ளது.

உரிய ஆவணங்கள், பத்திரிகைச் செய்தியறிக்கைகள், நம்பகம் வாய்ந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அகதிகளாய் இடம்பெயர்ந்துள்ள பலஸ்தீனர்களின் வாக்குமூலங்கள் என்பனவற்றை அடிப்படையாக வைத்து காஸாவிலும் மேற்குக் கரைப் பிராந்தியத்திலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினால் இடித்துத் தகர்க்கப்பட்ட பலஸ்தீன் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பற்றிய புள்ளிவிபரங்களைத் தமது அமையம் வெகுவிரைவில் வெளியிட இருப்பதாக அல் - மக்தீஸி குறிப்பிட்டுள்ளது.


SOURCE - INNERAM.COM

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza