உலக புகழ்பெற்ற நிறுவனமான கூகுல், அமெரிக்காவின் வர்த்தக நகரான நியூயார்கில் தனது அலுவலகத்தை தொடங்க இருக்கிறது. இதற்கான சுமார் 2 பில்லியன் டாலரில் 18 மாடி கட்டிடத்தை விலைக்கு வாங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.
சுமார் 280,000 சதுர மீட்டர் பரப்பளவை கொண்ட இக்கட்டிடத்தில் சுமார் 2000 பேர் கூகுல் நிறுவனத்திற்காக வேலை பார்ப்பார்கள். மேலும் கீழ் மாடி தளத்தில் புகழ்பெற்ற நிறுவனங்களான நைக், அர்மானி எக்சேஞ் போன்றவற்றின் காட்சி கடைகள் தொடர்ந்து இருந்து வரும் என தெரிகிறது. கட்டிடம் வாங்கியதை உறுதி செய்த கூகுல் நிறுவனம், விலையை தெரிவிக்கவில்லை.
எனினும் லாஸ் ஏஞலீஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ள செய்தியில் கட்டிடத்தின் மதிப்பு சுமார் 2 பில்லியன் டாலர் இருக்கும் என்றும், 2010 ஆண்டின் அமெரிக்காவில் வாங்கப்பட்ட ஆக அதிக மதிப்பிலான கட்டிடம் என மதிப்பிட்டுள்ளது.
செய்தி:பாலைவனதூது
0 கருத்துரைகள்:
Post a Comment