Thursday, November 25, 2010

பீகார் தேர்தல்:நிதீஷ்குமார் அமோக வெற்றி

பாட்னா,நவ.25:பீகார் சட்டசபைத் தேர்தலில் நிதீஷ்குமார் தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய வெற்றியை சந்தித்துள்ளது. இக்கூட்டணி 206 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. மொத்தமே 4 தொகுதிகளில் மட்டுமே அது வெற்றியை ஈட்ட முடிந்தது. லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான கூட்டணி 25 தொகுதிகளுடன் முடங்கிப் போயுள்ளது. மற்றவர்கள் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மனைவியான முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி ரகோபூர் மற்றும் சோனீப்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் இரு தொகுதிகளிலும் அவர் தோற்றுப் போய் விட்டார்.

மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 115 இடங்களிலும், பாஜக 91 இடங்களிலும், லாலுவின் கூட்டணிக்கு 25 இடங்களும், காங்கிரஸ் 4 இடங்களிலும், சுயேட்சைகள் 6 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட், ஜேஎம்எம் தலா ஒரு இடத்தையும் வென்றுள்ளன.

நிதீஷ் குமார் தலைமைக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணமாக, நரேந்திர மோடியை வர விடாமல் தடுத்தது பார்க்கப்படுகிறது. பிரசாரத்திற்கு மோடி வரவே கூடாது என்று ஆரம்பத்திலேயே உத்தரவு போட்டுவிட்டார் நிதீஷ். இதை ஏற்றே ஆகவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது பாஜக என்பது நினைவிருக்கலாம்.

2வது முறையாக முதல்வராகும் நிதிஷ்குமார் வெள்ளிக்கிழமை முதல்வராகப் பதவியேற்கிறார். அதற்கு முன்பாக இன்று காலை ஆளுநரை நேரில் சந்தித்து தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.
செயதி:பாலைவனதூது 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza