வாஷிங்டன்,நவ.24:அமெரிக்க அணுசக்தித்துறை அதிகாரிகளில் பலரும் முழுநேர குடிகாரர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
அணு ஆயுதங்களும் அதுத் தொடர்பான பொருட்களையும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சிலரை பொது இடத்தில் குடித்ததாக குற்றஞ்சாட்டி கடந்த வருடங்களில் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
ஒருவரை பொது இடத்தில் மது அருந்தியதாகவும், இன்னொருவரை பாரில் வைத்தும் கைதுச் செய்துள்ளது போலீஸ்.
தேசப்பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் ஏற்பட்டுள்ள மோசமான வீழ்ச்சியை இச்சம்பவம் தெளிவுப்படுத்துவதாக அறிக்கை தெரிவிக்கிறது. அணு ஆயுதங்களை கொண்டு செல்லும் வாகனங்களின் அதிகாரிகள் முழுநேரமும் மதுவில் மூழ்கியதற்கான 16 சம்பவங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்தேறியுள்ளன.
இதுத் தொடர்பாக விசாரணைத் துவங்கியுள்ளது. தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான பயிற்சியை பெற்றவர்கள்தான் அணு ஆயுதங்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்து அதிகாரிகள். அவர்கள்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அணு ஆயுதங்களையும், அத்துடன் தொடர்புடைய பொருட்களையும் கொண்டு செல்வதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி:பாலைவனதூது
0 கருத்துரைகள்:
Post a Comment