புதுடெல்லி: பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்காரி பதவி ஏற்று ஒரு ஆண்டு முடிந்து விட்டது. இந்நிலையில் நிதின் கட்காரி மீதும் அவரது செயல்பாடுகள் மீதும் இந்துத்வா அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதனால் பாரதீய ஜனதா கட்சியை வலுப்படுத்த சரியான தலைவர் தேவை என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கருதுகிறது. பாரதீய ஜனதா கட்சியில் தற்போது குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி செல்வாக்கு பெற்றவராக இருக்கிறார். மேலும் மக்கள் மத்தியிலும் அவருக்கு ஆதரவு உள்ளதாக சொல்லப்படுகிறது
இந்நிலையில் குஜராத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெற்றது. இதற்கு நரேந்திர மோடியின் செயல்பாடுதான் காரணம் என்று ஆர்.எஸ்.எஸ். கருதுகிறது. இதனால் மோடிதான் பாரதீய ஜனதாவின் தலைவராக வேண்டும் என்று அந்த அமைப்பு விருப்பம் தெரிவித்து உள்ளது. இதனால் அவரையே தலைவராக்குவதற்கான முயற்சியிலும் அந்த இயக்கம் ஈடுபட்டுள்ளது.
பாரதீய ஜனதா இழந்த செல்வாக்கை மீண்டும் பெற பொருத்தமானவர் மோடிதான் என்று அந்த அமைப்பு கருதுவதால் . 2014-ம் ஆண்டு பாரதீய ஜனதாவின் கட்சித் தலைவருக்கான பொதுத் தேர்தல் நடக்கிறது. அப்போது பாரதீய ஜனதாவின் அடுத்த தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment