தேசிய மாணவ அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நான்காம் ஆண்டு துவக்க நாளான நவம்பர் 7 அன்று CAMPUS DAY மற்றும் நவம்பர் 11 தேசிய கல்வி தினவிழா இந்தியா முழுவதும் பல்வேறு வகையில் கொண்டாடப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள முஸ்லீம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு கலந்தாய்வு நிகழச்சி நடைபெற்றது. இதில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மாவட்ட தலைவர் K.S.தமீமுன் அன்சாரி தலைமை தாங்கினார் . பள்ளியின் தலைமையாசிரியர் பரக்கத் உம்மா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆலோசனை உறுப்பினர் பக்கீர் முகம்மது " கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பணிகள் மற்றும் மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் கல்விப்பணிகள் குறித்து " சிறப்புரையாற்றினார். இறுதியாக தலைமை ஆசிரியருக்கு நினைவு பரிசும் மாணவியர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment