சென்னை: பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு அகில இந்திய அளவில் இயங்கி வரும் ஆல் இந்தியா இமாம் கவுன்சிலின் சார்பாக சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
ஆல் இந்தியா இமாம் கவுன்சிலின் மாநில தலைவர் செய்யது இபுராஹிம் உஸ்மானி தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். இப்போராட்டத்திற்கு சென்னையிலுள்ள பல மஸ்ஜிதுகளின் இமாம்கள் கலந்து கொண்டனர். பாபரி மஸ்ஜிதை மீட்க வேண்டும் என்ற அடிப்படையில் தேசம் முழுவதும் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் போராட்டங்களை நடத்தியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாலர் முஹம்மது ஷேக் அன்சாரி, இமாம் கவுன்சிலின் தேசிய செயலாளர் சாகுல் ஹமீது பாகவி, ஐக்கிய சமாதான பேரவையின் மாநில தலைவர் மெளலவி ஹாமித் பகரி மன்பஈ, புதுவை மாநிலத்தின் முஸ்லிம் லீக் தலைவர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன் கோஷங்களை எழுப்பினர்.

0 கருத்துரைகள்:
Post a Comment