Friday, December 28, 2012

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு

கலாச்சார பாரம்பரியமிக்க நம் நாட்டின் இன்றைய நிலை மிகவும்  வேதனையளிப்பதாக உள்ளது. தனி மனித ஒழுக்கங்கள், குடும்ப உறவு முறைகள், சமூக வாழ்வு என அனைத்தும் சிதைந்து வருகிறது. சுயநலம், பாலியல் வன்கொடுமைகள், தகாத உறவுகள், கொலை, கொள்ளை, மது, விபச்சாரம்,  பெண்களை போகப்பொருளாக பயன்படுத்துதல், கற்பழிப்பு போன்ற சமூக தீமைகள் தினமும் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது.
 நம் நாட்டில் புரையோடிக் கொண்டிருக்கின்ற இத்தகைய கலாச்சார சீரழிவுகளை முற்றிலும் களைந்து, களங்கமில்லா கலாச்சாரத்தை பாதுகாக்கும் நோக்கத்தோடு ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக வருகின்ற 29-12-2012 அன்று சென்னை எழும்பூரில் உள்ள ஃபைஸ் மஹாலில் இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளது.

 மாநில அளவில் இஸ்லாமிய அறிஞர்கள் பங்கேற்கும் இம்மாநாட்டில் ஆலிம்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் எனும் தலைப்பில் கருத்தரங்கமும், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கண்காட்சி, மலர் வெளியீடு மற்றும் மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர் மெளலானா மெளலவி உஸ்மான் பேக் ரஷாதி, தேசிய நிர்வாகிகள் மற்றும் தமிழகத்தின் தலை சிறந்த ஆலிம்கள் அறிஞர்கள் கலந்து கொண்டு கருத்துரை மற்றும் சிறப்புரையாற்ற இருக்கின்றனர். அடுத்த தலைமுறையை ஒழுக்க விழுமியங்களோடு வார்த்தெடுக்கவும், அநாகரீக கலாச்சாரங்களை விட்டு நம் நாட்டை பாதுகாக்கவும் நடத்தப்படும் இம்மாநாட்டில் அனைவரும் கலந்து பயனடைய ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza