Tuesday, December 4, 2012

ரிஹாப் சார்பாக வாலிநோக்கத்தில் நடைபெற்ற டெங்கு பரிசோதனை மற்றும் நோய்த் தடுப்பு மருந்து வழங்கும் முகாம்



ரிஹாப் இந்தியா பவுண்டேஷன் டிரஸ்ட் மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பாக தத்தெடுக்கப்பட்ட வாலிநோக்கம் கிராமத்தில் டெங்கு பரிசோதனை மற்றும் நோய்த் தடுப்பு மருந்து வழங்கும் முகாம் 01.12.2012 அன்று காலை 10.30 மணியளவில் மீனவர் காலணியில் உள்ள ரிஹாப் சமுதாயக் கூடத்தில் வைத்து நடைபெற்றது.

இதில் டெங்கு விழிப்புணர்வு , இரத்தப் பிரிவு கண்டறிதல் , நிலவேம்பு கசாயம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது . இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் ஹபீப் நவாஸ் தலைமை தாங்கினார் .


இம்முகாமை சிக்கல் காவல்துறை ஆய்வாளர் R.துரை அவர்கள் துவங்கி வைத்தார். SDPI கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முஹம்மது ஷரீபு சேட் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். வாலிநோக்கம் காவல்துறை சார்பு ஆய்வாளர் P.பாஸ்கரன் , வாலிநோக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஜனாபா K . மஜீதா அமீர்கான் , வாலிநோக்கம் சுகாதார ஆய்வாளர் T.இராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் .

இரத்தப் பிரிவு கண்டறியும் நிகழ்ச்சியை டாக்டர்.செந்தாமரை அவர்கள் துவங்கி வைத்தார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பரக்கத்துல்லாஹ் செய்தார்கள். இதன் மூலம் நூற்றுக்கணக்கான மக்கள் பயனடைந்தனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza