கடந்த மே 19-ந்தேதி வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் நமது பள்ளி 99% தேர்ச்சி பெற்றுள்ளது.
நமதூர் புதுவலசை அரபி ஒலியுல்லாஹ் பள்ளியில் 85 மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வை சந்தித்தனர். இதில் 84 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு மாணவர் மட்டும் தோல்வி அடைந்துள்ளார். மேலும், கடந்த வருடங்களை போலவே இவ்வருடமும் நமதூர் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்களை பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த வருடம் முதல் மூன்று இடத்தை மாணவிகளே பிடித்துள்ளனர்.
முதல் மதிப்பெண்:
1. மாணவி I.ப்ரீத்திகா - மொத்த மதிப்பெண் - 485/500
தமிழ் - 97, ஆங்கிலம் - 92, கணிதம் - 100, அறிவியல் - 99, சமூக அறிவியல் - 97.
இரண்டாம் மதிப்பெண்:
2. மாணவி M. ஜஷ்மிதா பானு - மொத்த மதிப்பெண் - 480/500
தமிழ் - 99, ஆங்கிலம் - 87, கணிதம் - 99, அறிவியல் - 96, சமூக அறிவியல் - 99.
மூன்றாம் மதிப்பெண்:
3. மாணவி S.சுல்பா - மொத்த மதிப்பெண் - 468/500
தமிழ் - 96, ஆங்கிலம் - 83, கணிதம் - 92, அறிவியல் - 98, சமூக அறிவியல் - 99.
மொத்தம் தேர்வு எழுதிய 85 நபர்களில் 44 பேர் 400-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்று நமது ஊருக்கும், பள்ளிகளுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த மிகச்சிறந்த வெற்றிக்காக உழைத்த ஆசிரியர்களுக்கும், தங்களது கடமையை சரிவர செய்து நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் நமது இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
0 கருத்துரைகள்:
Post a Comment