இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறையின் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டது.
இதனை கடந்த 27.05.2017 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்ட தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான சகோதரர்.முஹம்மது ரஸீன் அவர்கள் பயனாளிக்கு வழங்கினார்.
இந்நிகழ்சசியில் புதுவலசை ஏரியா தலைவர் ஹமீது இப்ராஹிம், ஏரியா செயலாளர் ரிஸ்வான் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment