பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இராமநாதபுரம் மாவட்டம்,புதுவலசை யூனிட் சார்பாக கடந்த மே 2 தேதி முதல் 12ம் தேதி வரை மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாணவர்களுக்கான சிறப்பு ஒழுக்க பயிற்சி வகுப்புகள், தனித் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், உடற் பயிற்சி வகுப்புகள், விளையாட்டுப் போட்டிகள் என பல பிரிவுகளில் வகுப்புகள் நடத்தப்பட்டது.
இறுதியாக இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மற்றும் சிறந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா கடந்த 12.05.2017 வெள்ளிக் கிழமை மாலை 4 மணியளவில் ஆறு கடை அருகே நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹமீது இப்றாஹீம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
தொடர்ச்சியாக 10 நாட்களுக்கும் மேலாக நடத்தப்பட்ட இம்முகாமில் 40 க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். புதுவலசை ஹசன் ஆலிம், ரிஸ்வான் மற்றும் சாகுல், சித்தார்கோட்டை ஹபீபு ரஹ்மான் ஆகியோர் உடன் இருந்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment