பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்ந்து நீதிக்காக போராடும்! - மாநில தலைவர் ஏ. எஸ். இஸ்மாயில்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒவ்வொரு வருடமும் அதன் துவக்க தினமான பிப்ரவரி 17 அன்று யூனிட்டி மார்ச் மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவை தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதனடிப்படையில் இந்த வருடம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பிப்ரவரி 17 அன்று ஒற்றுமை பேரணி (யூனிட்டி மார்ச்) மற்றும் பொதுக்கூட்டம் இராமநாதபுரத்தில் நடத்துவதென்று தீர்மானித்து அதற்கு முறையாக காவல்துறையிடம் எழுத்துப்பூர்வமான அனுமதி 16.02.2014 அன்று பெறப்பட்டது.
அதன் அடிப்படையில் 17.02.2014 நிகழ்ச்சி அன்று மாலை சுமார் 03.30 மணி அளவில் பேரணி துவங்க இருக்கையில் காவல்துறையினர் மேற்படி பேரணியை சீர்க்குலைக்கும் நோக்கிலும், பொதுமக்கள் பீதி அடைய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடனும் பேரணியில் கலந்து கொள்ள வந்த பொதுமக்கள் மீதும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் மீதும் திட்டமிட்டு காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதல் நடத்தினர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெண்கள் உட்பட அதிகமானோர் காவல்துறையின் தாக்குதலில் படுகாயம் அடைந்தனர்.
காவல்துறையினர் சட்டத்திற்கு புறம்பாக தாக்குதல் நடத்தியதால் அதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக மூன்று பொய் வழக்குகள் (C.NO : 67/2014, 68/2014, 69/2014) காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டது. இதிலுள்ள ஒரு வழக்கு ஏற்கனவே காவல்துறையால் பொய்யாக புனையப்பட்டதென நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டு அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் 1018 பேர் மீது போடப்பட்ட வழக்கும் பொய்யானவை என்று நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு 19/11/2014 அன்று நீதியரசர் அவர்களால் தள்ளுபடி செய்யப்பட்டதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்பதோடு தொடர்ந்து நீதிக்காக போராடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு
ஏ .எஸ் . இஸ்மாயில்,
மாநில தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.
0 கருத்துரைகள்:
Post a Comment