Monday, November 24, 2014

புதுவலசை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மீண்டும் கன மழை

புதுவலசை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மீண்டும் பெய்யத் தொடங்கிய கன மழையால் கிணறுகள் உட்பட நீர்நிலைகளில் நீர்  மட்டம் உயர்ந்துள்ளது. உமர் ஊரணி, பள்ளிவாசல் ஊரணி  உள்ளிட்ட  ஊரணிகள் நிரம்பி வழிகின்றன.

காயிதே மில்லத் பகுதி உள்ளிட்ட பல குடியிருப்பு  இடங்களில் மழை நீர்  மிக அதிக அளவில் தேங்கியுள்ளதால் பள்ளி,கல்லூரி செல்லும் மாணவ-மாணவியர், பொதுமக்கள் உட்பட பலரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


மேலும்,மங்கம்மா சாலை வழி புதுவலசை அருகே  துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கோப்பதப்பா தர்கா வழியாக செல்லும் சாலையிலும் மழை நீர் மிகவும் அதிக அளவில்  தேங்கியுள்ளதால் அப்பகுதி வழியாகவும் பொதுமக்கள்  செல்ல இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான சாலையான கோப்பேரி மடம்-ஆற்றங்கரை சாலை மிகவும் மோசமாக கட்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதிய மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வரும் 27-ம் தேதி முதல் தமிழகதில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.









Photo credit's: Puduvalasai photo's f.b page

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza