Tuesday, October 21, 2014

S.P பட்டிணம் காவல் நிலைய படுகொலையை கண்டித்து மனித உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்..!

இராமநாதபுரத்தில் எஸ்.பி  பட்டிணம் காவல்நிலைய படுகொலையை  கண்டித்து மனித உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு  சார்பில் மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் சந்தை திடல் அருகே கடந்த  20.10.2014 திங்கள் கிழமை அன்று காலை 11 மணியளவில்  நடைபெற்றது. 

இந்த கூட்டமைப்பில்  SDPI, CPM,CPI,INTJ,IUML, பாப்புலர் ஃப்ரண்ட், நாம் தமிழர், பெரியார் பேரவை, தமிழர் தேசிய முன்னணி,தமிழ் புலிகள் , விடுதலை சிறுத்தைகள்,புதிய தமிழகம், இளைஞர் பெருமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் கட்சிகள் இடம்பெற்றுள்ளன . 


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர்  R.T.ரகுநாதன் தலைமை தாங்கினார். மேலும்,Cpm திரு.கலையரசன்
நாம் தமிழர் திரு.ராஜு
பெரியார்பேரவை திரு.நாகேஸ்வரன்
Cpi திரு.ராஜன்
Intj திரு.அப்துல்காதர்
Iuml திரு.வருசைமுஹம்மது
Sdpi திரு.அப்துல்ஜமீல் ( கூட்டமைப்பு செயலாளர்)
தமிழர் தேசிய முன்னணி திரு.பசுமலை
தமிழ்புலிகள் திரு.முகில்அரசன்
விடுதலைசிறுத்தை திரு.கனிஅமுதன்
Pfi திரு.ஷாஜஹான் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இறுதியில் செய்யது முகம்மது தாய் மாமன் ஜகுபர் அலி நன்றி உரையாற்றினார். SDPI மகளீர் அணியினரும், புதிய தமிழகம் கதிரேசன் அவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்  படுகொலைக்கு காரணமான காவல்துறை சார்பு ஆய்வாளர் காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரியும், அவரை நிரந்தர பணி நீக்கம் செய்யக்கோரியும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நஷ்ட ஈட்டுத்தொகையை உயர்த்தி வழங்கவும் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 14.10.2014 அன்று விசாரனைக்காக எஸ்.பி. பட்டினம் காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட செய்யது முகம்மது என்ற 23 வயது வாலிபர், சார்பு ஆய்வாளர்.களிதாசால் காவல் நிலையத்தில் வைத்து சுடப்பட்டு  படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே செய்யது முகம்மதுவை பொலிசார் அடித்து கொன்ற பிறகே துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என்று நீதி காவல் மற்றும் சித்திரவை ஒழிப்பு பிரச்சாரத்தை சேர்ந்த அமைப்பினர் உண்மை கண்டறியும் குழு அமைத்து விசாரணைக்கு பிறகு தெரிவித்துள்ளனர்.


























0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza