Friday, October 10, 2014

புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய விளையாட்டு போட்டிகளின் பரிசளிப்பு விழா

புதுவலசையில் தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மின்னொளி கைப்பந்து மற்றும் கால்பந்து  ஆகிய  விளையாட்டு போட்டிகள் கடந்த 04.10.2014 மற்றும் 05.10.2014 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த விளையாட்டு போட்டிகளில் ஆர்வமுடன் பல இளைஞர்கள் கலந்து கொண்டனர்.


இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியினை பெருநாள் தினத்தில் நடத்துவதற்கு முதலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், தவிர்க்க இயலாத சில காரணங்களால் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது.

இறுதியாக இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று (09.10.2014) வியாழக் கிழமை மாலை சுமார் 6:30 மணியளவில் புதுவலசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. 

நிகழ்ச்சியின் முதலில் ''தியாகத்தில் வளர்ந்த இஸ்லாம்' என்ற தலைப்பில் சகோ.பைசல் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.  அதனையடுத்து சகோ.மீரான் ஒனி, சகோ. மஜீத் மற்றும் சகோ. சுஹைபுதீன் ஆகியோர் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.





















0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza