புதுவலசை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது.
தென்மேற்கு பருவ மழை பொய்த்துவிட்டதால் கடும் வறட்சியின் பிடியில் சிக்கியிருந்த புதுவலசை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் முன் கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தொடர் மழையால் நீர் மட்டம் வற்றியிருந்த ஊரணிகள்,கிணறுகள் தற்போது நிரம்ப தொடங்கியிருக்கின்றன.
மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment