புதுவலசையில் நடை பெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ.38.88 லட் சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அதி காரி விசுவநாதன் பயனா ளிகளுக்கு வழங்கினார்.
மக்கள் தொடர்பு முகாம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் ஆலோ சனையின் பேரில் மண்டபம் யூனியன் புதுவலசை அரபி ஒலியுல்லா பள்ளி வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகா முக்கு மாவட்ட வருவாய் அதி காரி விசுவநாதன் தலைமை தாங்கினார். வருவாய் கோட் டாட்சியர் திருமால்சாமி, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ரவீந்திரன், தாசில்தார் சுரேஷ்குமார், சமூக பாதுகாப்பு தாசில்தார் மாரி, குடிமைப்பொருள் வழங் கல் தனி தாசில்தார் கங்கா, சிறப்பு திட்ட அமலாக்க தனித்துணை ஆட்சியர் ராஜே சுவரன், ஊராட்சி தலைவர் கள் புதுவலசை சலீனாபானு ஜபருல்லாகான், தேர்போகி ஜெயக்கொடி ராதா கிருஷ் ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பஸ் வசதி, சாலை வசதி, மின் வசதி, விலையில்லா தையல் எந்திரம், சிறுதொழில் கடனு தவி, முதியோர் உதவி தொகை உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பொதுமக் கள் சார்பில் 360 மனுக்கள் அளிக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து சமூக நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை துறை, பிற்பட் டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறை, ஆதிதிராவி டர் நலத்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் ரூ.38 லட்சத்து 88 ஆயி ரத்து 829 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அதிகாரி விசுவநாதன் பயனாளிகளுக்கு வழங்கி னார். அப்போது அவர் பேசி யதாவது:– ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக பாது காப்பு திட்டத்தின் கீழ் ஏழை களுக்கும், முதியோர்களுக்கும் உதவி தொகை வழங்கப் பட்டு உள்ளது. இந்த முகாமில் ஏராளமானோர் தேர்போகி முதல் புதுவலசை வழியாக பனைக்குளம் செல்லும் சாலை மிகவும் மோசமாக பழுதடைந்துள்ளதாக மனு கொடுத்துள்ளனர். இந்த சாலையை சீரமைக்க நடவ டிக்கை மேற்கொள்ளப்ப டும்.
மனுக்கள்
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட கலெக்டர் நந்தகுமார் மக்க ளின் கோரிக்கை மனுக்கள் குறித்து உடனுக்குடன் நடவ டிக்கை எடுக்க அனைத்து அதி காரிகளுக்கும் உத்தரவிட்டுள் ளார். தமிழக அரசு பல் வேறு நலத்திட்டங்களை மக்களுக் காக அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதனை பொது மக்கள் அனைவரும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட வழங் கல் அலுவலர் மோகன், பிற் பட்டோர் நல அலுவலர் நாக நாதன், கனிமவள துணை இயக்குனர் சொக்கலிங்கம், மண்டல துணை தாசில்தார் கள் ராமசாமி, சிரோன்மணி, பெருங்குளம் வருவாய் ஆய் வாளர் சசிகலா, கிராம நிர்வாக அலுவலர்கள் குயவன்குடி சைபுதீன், வாலாந்தரவை காளிதாஸ், அழகன்குளம் மூர்த்தி, ரெட்டையூரணி வேலு, அத்தியூத்து கண்ணன், ஆரம்ப சுகாதார நிலைய மருத் துவர் சசிக்குமார் உள் பட பலர் கலந்து கொண்ட னர். ஏற்பாடுகளை தேர்போகி கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதபூபதி செய்திருந் தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment