தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு புதுவலசையில் முதன் முறையாக திடல் தொழுகை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நமதூரில் நபிவழி திடல் தொழுகை நடத்தப்பட வேண்டும் என்ற மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று நமதூர் ஜமாஅத் இந்த வருட ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நமது அரபி ஒலியுல்லாஹ் உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள திடலில் நடத்த தீர்மானித்தது.
இதனையடுத்து நேற்று (05.10.2014) முழுவதும் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று (06.10.2014) காலை சரியாக 7:30 மணியளவில் பெருநாள் தொழுகை ஆரம்பமாகியது. சகோ. அஹமது அமீன் ஆலிம் அவர்கள் தொழுகையை நடத்தினார்கள்.
சகோ. காதர் இஸ்மாயில் ஆலிம் அவர்கள் "திடல் தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் தியாகத் திருநாளின் படிப்பினைகள்" என்ற தலைப்பில் பெருநாள் தின சிறப்பு பயானை நிகழ்த்தினார்கள். மேலும், இந்த திடல் தொழுகை வரக்கூடிய பெருநாட்களிலும் தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள். இதில் நமதூரை சேர்ந்த ஏராளமான ஆண்களும்,பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment