புதுவலசையில் 2014-ம் ஆண்டிற்கான ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை அரபி ஒலியுல்லாஹ் உயர் நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள திடலில் நடைபெறும் என புதுவலசை முஸ்லிம் ஜமாஅத் அறிவித்துள்ளது.
கடந்த பல நாட்களாகவே நபிவழியில் திடல் தொழுகை நமதூரில் நடத்தப்பட வேண்டும் என நமதூர் இமாம்களும், புதுவலசை வாழ் முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் என அனைவரும் தொடர்ச்சியாக நமதூர் ஜமாஅத் நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இதனை பரிசீலித்த ஜமாஅத் நிர்வாகம் இந்த வருட ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வரும் 6-ம் தேதி திங்கள் கிழமை காலை 7:30 மணியளவில் புதுவலசை அரபி ஒலியுல்லாஹ் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள திடலில் நடைபறும் என இன்றைய (03.10.2014) ஜும்மா வில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment