இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற கால்பந்து விளையாட்டு போட்டி!
ஒரு நாட்டின் மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் தால் நாடு வலிமையாக இருக்கும். வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்தோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா "ஆரோக்கியமான மக்கள், வலிமையான தேசம்" என்ற பிரச்சாரத்தை ஒவ்வொரு வருடமும் தேசிய அளவில் செய்து வருகின்றது.
இவ்வருடம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தீர்மானத்தின் அடிப்படையில் அக்டோபர் 15 முதல் 30 வரை நடைபெறும் இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அழகன்குளம் மற்றும் ஆற்றங்கரை இடையிலான கால்பந்து விளையாட்டு போட்டிகள் 22-10-2014 அன்று நடைபெற்றது.
போட்டிகளை ஆற்றங்கரை ஊராட்சி மன்றத் தலைவர் ஜனாப். அஸ்மத் அலி அவர்கள் தொடக்கி வைத்தார். இறுதியில் 1-0 என்ற கணக்கில் ஆற்றங்கரை அணி வெற்றிபெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு மீனவர் சங்கத் தலைவர் ஜனாப். முகம்மது அலி அவர்கள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் சகோ.நாசர் ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குறிப்பு: நமதூரில் (புதுவலசையில்) கைப்பந்து போட்டி நடத்துவதாக முன்னர் தீர்மானிக்கப்பட்டு அதில் பங்கேற்க கூடிய விளையாட்டு வீரர்களுக்கும் அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், தொடர் மழையினால் மைதானமும் ஒத்துழைக்காததால் அந்த போட்டி ரத்து செய்யப்பட்டது.
0 கருத்துரைகள்:
Post a Comment