காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மாநிலம் மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை செயல்படுத்தப்போவதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஷ்மீர் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை துவங்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தயார் நிலையில் உள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, அங்கு நிலவி வரும் நிலைமையை ஆராய்ந்துள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்களின் ஒரு நாள் வருவாயை பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களின் நிவாரண உதவியாக வழங்குவார்கள். காஷ்மீரில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நமது சகோதர, சகோதரிகளுகாக மனிதாபிமான அடிப்படையில் நடைபெறும் இந்த பணிகளுக்கு தேவையான நிவாரண பொருட்களுக்காக இந்திய மக்கள் அனைவரும் தங்களுடைய பங்களிப்பை அளிக்கை வேண்டும் என கேட்டுகொள்கிறோம்.
மேலும் எவ்வித சுயநலனுமின்றி மீட்பு பணிகளின் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இந்திய இராணுவம் மற்றும் மனிதாபிமான குழுக்களை செயல்பாடுகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பாராட்டுகின்றது.
காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பேரழி அதிக அளவில் இருப்பதால், மீட்பு பணிகளுக்கு பிறகும் கூட அவசர முதலுதவி வழங்கக்கூடிய சூழல் அதிகமாக இருக்கின்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிவாரண குழு மருத்துவம், உணவு, உடை, வீடுகளை சரிசெய்தல் உட்பட நான்கு பிரிவுகளில் முக்கிய கவனம் செலுத்தி, ஏற்கனவே களத்தில் இருக்கும் நிவாரண குழுக்கல் மற்றும் மாநில அரசின் பல்வேறு துறைகளுடன் சேர்ந்த இந்த நிவாரண பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயல்படுத்து. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பணிகளை துவங்கும்" என தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment