Saturday, August 16, 2014

புதுவலசையில் பாப்புலர் ப்ரண்ட் சார்பில் சுதந்திர தின நிகழ்ச்சி

புதுவலசையில் பாப்புலர் ப்ரண்ட்  ஆஃப் இந்தியா சார்பில் பேருந்து நிலையம் எதிரே தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. நாட்டின் 68-வது சுதந்திர தினம் நேற்று (15.08.2014) நாடு முழுவதும் உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பாப்புலர் ப்ரண்ட்  ஆஃப் இந்தியா சார்பில் இந்தியா முழுவதும் சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 

தியாகிகளை  கெளரவப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், விளையாட்டு போட்டிகள், பொதுக்கூட்டங்கள்   என பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுடன் நாடு முழுவதும் உள்ள பாப்புலர் ப்ரண்ட் செயல் வீரர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள தேசிய தலைமையகத்தில் பாப்புலர்  ப்ரண்டின் தேசியத் தலைவர் சரீப் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

நமதூரிலும் சுதந்திர தின விழா பாப்புலர் ப்ரண்ட்  ஆஃப் இந்தியா சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாப்புலர் ப்ரண்டின் இராமநாதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹமீது இப்ராஹீம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். சகோ. அபுல் காஸிம் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்கள். சகோ. நூருல் ஹஸன் பாகவி அவர்கள் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள்  பற்றி சிறப்புரை நிகழ்த்தினார்கள். இறுதியாக சகோ. ரிஸ்வான் அவர்கள் நன்றியுரை கூறினார். இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பாப்புலர் ப்ரண்ட் சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டது.






0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza