EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் சார்பாக ஒவ்வொரு வருடமும் நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் முகமாகவும் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் நமதூர் அரபி ஒலியுல்லா பள்ளிகளின் சார்பில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா வெகு சிறப்பாக 10.08.2014 அன்று நமதூர் மதரஸா வழாகத்தில் பொழிவுடன் நடைபெற்றது. இதில் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கும், 400-க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
மேலும் இவ்வருடம் முதல் நமதூரில் இருந்து வெளியூர்களில் சென்று படித்து சாதனை படைக்கும் +1, +2 மாணவ, மாணவியருக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. அதனடிப்படையிலும் பரிசுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு உறுதுணையாக இருக்கும் ஆசிரிய பெருமக்களை கண்ணியபடுத்தும் விதமாக அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்சியை நமதூர் ஜமாத் நிர்வாகிகளே முன்னின்று சிறப்பாக நடத்திதந்தனர். இதில் EPMA நிர்வாகிகள், ஜமத்தார்கள், சங்கத்தார்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு நிகழ்சியை சிறப்பித்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment