Thursday, June 5, 2014

துபையில் EPMA சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி


கடந்த பலவருடங்களாக EPMA சார்பாக நமதூருக்கு பல்வேறு நலப்பணிகள் செய்துவருவது தாங்கள் அறிந்ததே. அதில் முக்கியமாக வெளிநாடுகளில் வாழும் நாம் கல்வியின் அவசியத்தை நன்கு உணர்ந்தவர்கள் அதன் அடிப்படையில் நமதூர் வாழ் மக்களை கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து அதன் பக்கம் உந்தி தள்ளுவது நமது கடமை. 


கல்வியில் சிறந்து விளங்கும் நமதூர் மாணவ, மாணவிகளை உற்சாக மூட்டும் விதமாகவும், பாராட்டி மேலும் கல்வியில் தொடந்து முன்னேர நாம் வருடம் தோறும் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவை நடத்தி வருகிறோம். அதன் அங்கமாக இந்த வருடம் பரிசளிப்பு விழா நடத்துவதற்கான கலந்துரையாடல் நிகழ்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் நமதூரை சேர்ந்த சகோதரர் ஜாபிர் ஹூசைன் அவர்களது மகன் சகோதரர் பார்தான் அவர்கள் இந்த கல்வியாண்டில் CBSE - syllabus (Central Board of Secondary Education) 12-ம் வகுப்பில் துபையில் தான் பயின்ற பள்ளியில் மூன்றாம் இடத்தை பிடித்து சிறப்பித்துள்ளார். அவரை பாராட்டும் விதமாக வரும் வெள்ளிக்கிழமை (06-06-2014) மாலை 5.00 மணி அளவில் துபை, அல் கிசைசில் உள்ள அவர்களது இல்லத்தில் சந்தித்து கவுரவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஊக்குவிப்புகளையும், பாராட்டு மற்றும் பரிசளிப்புகளையும் செய்வதற்கு காரணம் கல்வியில் பின்தங்கி இருக்கும் நம் சமூகம் முன்னேற்ற பாதையில் பயணிக்க வழிகாட்டுதலும், உந்துதலும் அவசியம் என்ற உயர்ந்த நோக்கத்தில் தான். இதில் நம் அனைவரும் பங்குதாரர்களாக வல்ல அல்லாஹ் துணை புரிவானாக. 

இன்று நாம் ஊக்குவிக்கும் மாணவ, மாணவியர் நாளை சமூகத்திற்கு பங்களிப்பு செய்யும் உயர்ந்த உள்ளங்களாக மாறுவார்கள். இஸ்லாத்தின் பார்வையில் கல்வி என்பது பணம் சம்பாதிப்பதற்கான வழிமட்டும் அல்ல. அது ஒரு புனித பணி. (Education is not a Profession, It's noble mission) அதை விளங்கிய நாம் அனைவரும் இந்த உயர்ந்த நோக்கத்திற்காக ஒன்றினைவோம்.

இடம் : சகோதர் ஜாபிர் ஹுசைன் இல்லம் (அல் கிசைஸ், துபாய்)
நேரம் : மாலை 5.00 மணி 
நாள் : 06-06-2014 ( வெள்ளிகிழமை)

இப்படிக்கு 
முஹம்மது பைசல்,
EPMA செயலாளர், 
துபாய். 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza