Friday, June 20, 2014

ஏர்வாடிதர்ஹாவில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை


எஸ்.டி.பி.ஐ கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் கூறியதாவது,

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் அலங்கார வாயில் அருகே பல ஆண்டுகாலமாக சாலையோர வியாபாரிகள் பொதுமக்களுக்கு எவ்வித  இடையூறு இல்லாமலும்,போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.ஆனால் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி  இவர்களது கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் கடைகளை அப்புறப்படுத்த கூடாது எனக்கூறி சம்சுதீன் என்பவர் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து  தடையாணை உத்தரவினை பெற்றார்.நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில் கடையினை அப்புறப்படுத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தார்.ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் நேற்று ஏனைய கடைகளுடன் சம்சுதீன் என்பவரது கடையும்  மாவட்ட நிர்வாகம்,வருவாய்துறை,ஊராட்சி நிர்வாகம் ஆகியவை இடித்து தரைமட்டமாக்கியுள்ளது.

பல ஆண்டுகாலமாக தொழில் செய்து சுயமரியாதையுடன் பிழைப்பு நடத்தி வருகின்ற சாலையோர வியாபாரிகளை ஊக்கப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம்,அவர்களை அலட்சியப்படுத்தி,அவர்களின் வாழ்வாதாரங்களை சீர்குலைத்து இதனை நம்பி வாழ்ந்து வந்த 150க்கும் மேற்பட்டோர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.மேலும் நீதிமன்ற உத்தரவை மாவட்ட நிர்வாகமே அலட்சியப்படுத்தியுள்ளது.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தடை ஆணை பெற்ற பிறகும்,நீதிமன்ற உத்தரவினை கூட மதிக்காமல் நடந்த சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த சம்சுதீன் என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஆகவே மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் அனைத்து தளவாட பொருட்களையும்,சுய மரியாதையையும் இழந்து நிற்கும்  சாலையோர வியாபாரிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.அவர்களது வாழ்வாதாரத்திற்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza