Tuesday, May 20, 2014

நிரபராதிகள் தீவிரவாத வழக்குகளில் சிக்கவைக்கப்படுகின்றனர்! - உச்சநீதிமன்றம்!




புதுடெல்லி: தீவிரவாத வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளை கைதுச் செய்வதற்கு பதிலாக நிரபராதிகளை பொய்வழக்குகளில் சிக்கவைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள அக்ஷார்த்தம் கோயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டு கைதுச் செய்யப்பட்ட 6 பேரை குற்றமற்றவர்கள் என்று விடுவித்து தீர்ப்பளித்தபோது உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.

இவ்வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு பொடா நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்த ஆதம்பாயி சுலைமான் பாயி அஜ்மீரி, அப்துல் கயாம், சாந்த் கான் ஆகியோரையும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முஹம்மது ஹனீஃப் ஷேக், அப்துல்லா மியா யாஸீன் மியா காதிரி, அல்தாஃப் மாலிகி ஆகியோரை நீதிபதிகளான ஏ.கே.பட்நாயக், வி.கோபால கவுடா ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு விடுதலைச் செய்தது.
பொடா சட்டத்தின்படி குற்ற விசாரணை செய்யவேண்டுமானால் மாநில அரசின் அனுமதி தேவை.இது கடைப்பிடிக்கப்படவில்லை.போலீஸ் காவலில் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளலாம் என்று பொட சட்டம் கூறுகிறது.ஆனால், இது இவ்வழக்கில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
2002 செப்டம்பர் 25-ஆம் தேதி அக்ஷார்தம் கோயில் மீது இரண்டு துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர்.85 பேருக்கு காயமடைந்தனர்.தேசிய பாதுகாப்பு படையினர்(என்.எஸ்.ஜி) நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் கொல்லப்பட்டனர்.
குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படையினர் ஒரு வருடமாக வழக்கை விசாரித்தபோதும் எந்த முடிவையும் எட்ட முடியவில்லை.பின்னர் இவ்வழக்கு அஹ்மதாபாத் க்ரைம் ப்ராஞ்சுக்கு மாற்றப்பட்டது.அப்போதைய குஜராத் டி.ஜி.பி வன்ஸாரா தலைமையில் ஏ.சி.பி ஜி.எஸ்.சிங்கால் இவ்வழக்கை விசாரித்தார்.முதல் நாள் அன்றே ஆறு பேர் கைதுச் செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட துப்பாக்கி ஏந்திய நபர்களின் உடலிலிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு கடிதங்கள், ஆறு பேரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஆகியன ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டது. இவற்றையெல்லாம் பொடா நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் அங்கீகரித்தன.இதனைத்தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு ச்செய்தனர்.
டி.ஜி வன்ஸாரா, சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.போலீஸ் தங்களை பொய்வழக்கில் கைதுச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜரான மூத்த வழக்குரைஞர்களான கே.டி.எஸ்.துளசி, அமரேந்திர சரண், காமினி ஜெஸ்வால், அனீஸ் சுஹ்ரவர்த்தி ஆகியோர் வாதிட்டனர்.அடித்து குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை போலீஸ் பெற்றது என்பதற்கான எக்ஸ்ரே முடிவுகளையும் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களை கடுமையாக தாக்கியே குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது என்று சந்தேகிப்பதாக ஆவணங்களை பரிசோதித்த உச்சநீதிமன்றம் தெரிவித்தது. பொடா சட்டத்தின் சட்டப்பிரிவுகளை கூட போலீஸும், மாஜிஸ்ட்ரேட்டும் கடைப்பிடிக்கவில்லை.குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வாபஸ் பெற்றதை உயர்நீதிமன்றமும், பொடா நீதிமன்றமும் கவனத்தில் கொள்ளவில்லை.வன்ஸாரா வாக்குமூலத்தை பதிவுச் செய்ததில் மர்மம் உள்ளது.இவ்வழக்கில் முக்கிய சாட்சிகளில் ஒருவரான வன்ஸாராவை கீழ் நீதிமன்றங்கள் விசாரிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
ஆட்டோ ரிக்ஷா திருட்டின் பெயரால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்த்ததாக ஆதம்பாயி சுலைமான் பாயி அஜ்மீரி தெரிவித்தார்.குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஆறு பேரில் பலரையும் முன்பே பல்வேறு வழக்குகளில் கைதுச் செய்து சிறைவைக்கப்பட்டிருந்தனர்.இது தொடர்பாக ஒரு போலீஸ் அதிகாரி அளித்த வாக்குமூலத்தை கீழ் நீதிமன்றங்கள் ஆராயவில்லை என்று உச்சநீதிமன்றம் விமர்சித்தது.
கடுமையான மனித உரிமை மீறல்களை தொடர்ந்து வாபஸ் பெற்ற பொடா சட்டத்தின் அடிப்படையிலான விசாரணைகள் தற்போதும் தொடருவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. போலீஸிற்கு வலிமையான அதிகாரங்களை வழங்கும் இச்சட்டம் அதிகமாக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.இத்தகைய சட்டங்களின் அடிப்படையிலான விசாரணைகளில் கீழ் நீதிமன்றங்கள் அதிக கவனமாக இருக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
Source: popularfronttn.org

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza