Monday, April 28, 2014

எகிப்தில் சிறை இன்திஃபாழா துவங்குகிறது!



எகிப்திய சிறைகளில் நடக்கும் கடுமையான மனித உரிமை மீறல்களை கண்டித்து அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் ‘சிறை இன்திஃபாழாவை’ சிறைக்குள் போராட்டம் துவங்க உள்ளனர்.
சதிப் புரட்சியின் மூலம் அநியாயமாக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரையும், ஆட்சியையும் கவிழ்த்த சர்வாதிகார ராணுவ அரசு 18 ஆயிரம் பேரை அநியாயமாக சிறையில் அடைத்துள்ளது. இவர்கள் அனைவரும் சிறை இன்திஃபாழாவில் பங்கேற்பர்.

சிறை இன்திஃபாழாவின் ஒரு பகுதியாக கூட்டு உண்ணாவிரதம், சிறை அதிகாரிகளுக்கு ஒத்துழையாமை ஆகியன நடைபெறும். எகிப்தில் 17 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 18 ஆயிரம் கைதிகள் இதில் பங்கேற்பர். அரசியல் கைதிகளுடன், குற்றவியல் வழக்குகளில் அடைக்கப்பட்டவர்களும் சிறை இன்திஃபாழா  ஆதரவு தெரிவித்துள்ளதால் கூட்டு உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை 23 ஆயிரமாக உயரும் என்று சதிப்புரட்சி அரசுக்கு எதிராக செயல்படும் அமைப்பு தெரிவித்துள்ளது.
எகிப்திய சிறைகளில் கொடிய சித்திரவதைகளும், கடுமையான மனித உரிமை மீறல்களும் அரங்கேறுவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. சிறைக் கைதிகளுக்கு பல நாட்கள் உணவும், குடிநீரும் மறுக்கப்படுகிறது. நோயாளிகளுக்கு சிகிட்சை அளிப்பதில்லை. குறுகிய சிறைகளில் அதிகமான ஆட்களை அடைப்பது, பெண் கைதிகளை பாலியல் சித்திரவதைச் செய்வது என பல்வெறு கொடூரங்கள் அரங்கேறுகின்றன.
சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், சர்வதேச உலமா சபையும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும் கொடிய சித்திரவதைகள் குறைந்தபாடில்லை.
இச்சூழலில் சிறைக் கைதிகளுக்கான அமைப்பு சிறை இன்திஃபாழாவுக்கு தயாராகியுள்ளது. இஃவானுல் முஸ்லிமீன் தலைவர் பெல்தாஜி உள்ளிட்ட சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளையில், சிறைக் கைதிகளின் கூட்டு உண்ணாவிரதப் போராட்டம் உலக அரங்கில் எகிப்தை கேவலப்படுத்தும் முயற்சியாகும் என்றும் இதன் பின்னணியில் இஃவானுல் முஸ்லிமீன் இருப்பதாகவும் எகிப்தின் உள்துறை இணை அமைச்சர் உமர் தாஹிர் தெரிவித்தார்.
உண்ணாவிரதப்போராட்டம் மூலம் யாராவது மரணமடைந்தால் அதனை தற்கொலையாகவே கருதுவோம். அதற்கு சிறை அதிகாரிகள் பொறுப்பல்ல என்று தாஹிர் மேலும் தெரிவித்தார்.
Source: Newindia.tv

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza