ராமநாதபுரத்தில் கடந்த வாரம் நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் பேரணியின் போது, தனது ஹோட்டலை அடித்து நொறுக்கியாகதாக புகார் அளித்தவர், போலீசாரின் மிரட்டலால் புகார் அளித்தேன் என கூறியதால் அவ்வழக்கை முடித்துக் கொள்வதாக அரசு வக்கீல் தெரிவித்துள்ளார்.
பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பின் சார்பில் அவர்களின் இயக்க தினமான பிப்.17 அன்று மக்கள் உரிமைக்காக ஒன்றிணைவோம் என்ற முழக்கத்துடன் ஒற்றுமை பேரணியை நடத்தினர். முதலில் அனுமதி அளித்து பின்னர் பேரணி தொடங்கிய போது அனுமதி மறுத்து தடியடி நடத்தினர். இதில் பலருக்கும் பலத்த காயம் ஏற்ப்பட்டது.
மேலும் கலவர முயற்சி என்ற பெயரில் 1011 பேர் மீது 3 வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். கடந்த பிப் 19 மற்றும் 20 தேதிகளில் இதுதொடர்பாக 19 பேரை போலீசார் பிடித்து சென்றனர்.
அவர்களை சட்டவிரோதமாக போலீசார் அடைத்து வைத்துள்ளதாகவும், அவர்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வக்கீல் அணி ஒருங்கிணைப்பாளர் முகமது அப்பாஸ் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, 19 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளதாக அரசு வக்கீல் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் மயில்வாகன ராஜேந்திரன் ஆகியோரும், மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், எஸ்.எம்.ஏ.ஜின்னா, சி.எம்.ஆறுமுகம் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், கைதான 19 பேருக்கும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ராமநாதபுரம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்த போதிலும் போலீசார் அந்த உத்தரவை செயல்படுத்தவில்லை என்றனர். இதைத் தொடர்ந்து அரசு வக்கீல், ராமநாதபுரம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் 19 பேருக்கும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார். இதன்பின்பு, 19 பேருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்த அறிக்கையை 26 ம் தேதி தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து மனுதாரர் வக்கீல்கள், கைதான 19 பேரையும் இடைக்கால ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றனர். இதுதொடர்பான விசாரணையையும் நாளை 26 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
கைதானவர்களில் ரசூல்கனி என்பவர் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று மனுதாரர் வக்கீல் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து ரசூல்கனியின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை இன்று 25 ஆம் தேதி அரசு வக்கீல் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதனை தொடர்ந்து சீனி அப்துல்காதர் என்வர் ஓட்டலை ஊர்வலத்தில் வந்தவர்கள் சூதாடியாக போலீசார் ஒரு பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். சீனி அப்துல்காதர் என்பவரை மிரட்டி அவரது கையெழுத்தை வெற்று பேப்பரில் பெற்று போலீசாரே பொய் புகார் தயாரித்து சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் வக்கீல்கள் கேட்டுக்கொண்டனர். முன்னதாக சீனி அப்துல் காதர் நேரில் ஆஜாராகி அது பொய் புகார் என்று கூறினார்.
இதையடுத்து அரசு வக்கீல், அந்த வழக்கில் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்றும், அந்த வழக்கை முடித்து விடுவதாகவும் தெரிவித்தார். இதை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.
source : Newindia.tv
0 கருத்துரைகள்:
Post a Comment