ஜெருசலேம்: முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான பைதுல் முகத்தஸ் என்றழைக்கப்படும் அல் அக்ஸா மஸ்ஜிதின் இமாம் ஷேக் ராஇத் ஸலாஹி வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசினார் என்று இஸ்ரேல் நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதற்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. கடந்த 2007ம் ஆண்டு அவர் நிகழ்த்திய ஓர் உரையில், “அல் அக்ஸாவைக் காப்பதற்காக என் உயிரைக் கூட கொடுப்பேன்” என்று அவர் பேசியது வன்முறையையும், இனவாதத்தையும் தூண்டியதாம்.
இதுதான் அவர் மீதுள்ள குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டை வைத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் இப்பொழுது அவர் மீது குற்றத்தை உறுதிப் படுத்தி தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதற்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும்.
இலாமிய இயக்கம் என்ற அமைப்பின் தலைவராகவும் ஸலாஹ் உள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment