முஸஃபர் நகர்: உத்தரப் பிரதேச அரசால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு முஸஃபர் நகர் கலவரம் தொடர்பான 254 வழக்குகளில் தனது விசாரணையை நிறைவு செய்துள்ளதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இது குறித்து உத்தரப் பிரதேச போலீஸ் ஏ.டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) முகுல் கோயல் கூறியதாவது:
கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு 254 வழக்குகளில் தனது விசாரணையை முடித்துக் கொண்டுள்ளது. தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக இது குறித்த அறிக்கை சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று கோயல் கூறினார்.
முஸஃபர் நகர் கலவரம் தொடர்பாக 6,000 பேருக்கு எதிராக 598 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 184 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- thoothu online
0 கருத்துரைகள்:
Post a Comment