Friday, November 22, 2013

முந்தைய தலைமுறையை விட தற்போதைய குழந்தைகளின் உடல் வலு குறைவு!-ஆய்வில் தகவல்!



லண்டன் : உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பல லட்சக்கணக்கான குழந்தைகளிடம் நடத்திய ஆய்வொன்று, தற்காலக் குழந்தைகளில் பலரால், அவர்களின் பெற்றோர்கள் அவர்களைப் போல இளம் வயதினராக இருந்த காலத்தில் ஓடியது போல அதே போன்ற வேகத்தில் ஓட முடியவில்லை, என்பதைக் கண்டறிந்திருக்கிறது.
ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் 28 நாடுகளிலிருக்கும் சுமார் 2.5 கோடிக்கும் மேலான குழந்தைகளிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.


ஒரு மைல் ஓடுவதற்கு, இக்காலக் குழந்தைகள், 30 ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தைகள் இதே அளவு தூரத்தை ஓடிக்கடப்பதற்கு எடுத்துக்கொண்ட நேரத்தை விட ஒன்றரை நிமிடம் அதிகம் எடுத்துக்கொள்கிறார்கள் என்று அந்த ஆய்வு கண்டறிந்திருக்கிறது.
குழந்தைகளின் உடல் பருமனாக இருப்பதற்கு இதற்கு ஒரு காரணம் என்று இந்த ஆய்வை நடத்தியவர்கள் கூறுகிறார்கள். சரியான உடற்பயிற்சி இல்லாததால் இளைஞர்கள் எதிர்காலத்தில் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள் என்று அந்த ஆய்வு எச்சரித்தது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza