ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவில் வாக்களிக்கும் உரிமையை அமெரிக்காவும், இஸ்ரேலும் இழந்துள்ளன.
பலஸ்தீனத்தை யுனெஸ்கோ அமைப்பில் உறுப்பினராக கடந்த 2011 ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. பலஸ்தீனத்தை உறுப்பினராக இணைத்துக் கொண்டதை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் எதிர்த்தன.
எதிர்ப்பைமீறி பலஸ்தீனத்தை உறுப்பினராக இணைத்துக் கொண்டதால், யுனெஸ்கோவுக்கு வழங்கி வந்த நிதியுதவியை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிறுத்தின. இதனைத் தொடர்ந்து கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய யுனெஸ்கோவில் பலர் வேலை இழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, யுனெஸ்கோவில் வாக்களிக்கும் உரிமையை அமெரிக்காவும் இஸ்ரேலும் தக்க வைத்துக் கொள்ள கடந்த வெள்ளிக்கிழமை இறுதி கெடு விதிக்கப்பட்டது. ஆனால், இவ்விரு நாடுகளிடமிருந்தும் நிதி வழங்குவது தொடர்பாக எவ்வித ஆவணமோ பதிலோ பெறப்படாததால், யுனெஸ்கோவில் வாக்களிக்கும் தகுதியினைக் கடந்த வெள்ளிக் கிழமையோடு இவ்விரு நாடுகளும் தானாகவே இழந்ததாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
Source : Inneram
0 கருத்துரைகள்:
Post a Comment