Sunday, November 10, 2013

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்

இலங்கை தலைநகர் கொழும்பில் வருகின்ற 15-ம் தேதி காமன்வெல்த் மாநாடு தொடங்குகிறது. சொந்த நாட்டு மக்களையே அழித்தொழித்து, சர்வாதிகார போக்கில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ராஜபக்சே அரசை உலக நாடுகள் கண்டித்துக்கொண்டிருக்கும் வேளையில், காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற்றால் அது உலக நாடுகளுக்கு மத்தியில் ராஜபக்சே அரசுக்கு மதிப்பைக் கூட்டும் விதமாகவும், ராஜபக்சே அரசு முன்னின்று மேற்கொண்ட இனப்படுகொலைகளை மறக்கடிக்கும் விதமாகவும் அமைந்து விடும்.

எனவே, தமிழகத்தில் வலுப்பெற்று வரும் போராட்டங்களுக்கு, தமிழக சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மற்றும் ஒட்டு மொத்த தமிழக மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தியாவில் இருந்து யாரும் இலங்கையில் நடைபெறக்கூடிய காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
ஏ.எஸ்.இஸ்மாயீல்
மாநில தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நாடு
Suorce : popularfronttn.org

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza