Thursday, September 26, 2013

முஸஃபர்நகர்: பாப்புலர் ஃப்ரண்டின் துயர் துடைப்புப் பணிகள் துவங்கின!



உத்தரப் பிரதேச மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸஃபர்நகர் மாவட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவக்கியுள்ளது.
புதானா தாலுக்காவில் உள்ள டோடா கல்யாண்பூர் கிராமத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள 200 குடும்பத்தினருக்கு அத்தியாவசியப் பொருட்கள் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக விநியோகிக்கப்பட்டன.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் ஒ.எம். அப்துல் ஸலாம் நிவாரண உதவிகள் வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.
“மக்களிடம் தன்னம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும் புனரமைத்து பாதுகாப்பான மறுவாழ்வை ஏற்பாடு செய்வதுதான் பாப்புலர் ஃப்ரண்டின் முதல் கட்டப் பணி. கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் நீதி கிடைக்கும் வரை பாப்புலர் ஃப்ரண்டின் பணி தொடரும். பல்வேறு சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை உருவாக்குவது அத்தியாவசியமாகும்” என்று பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொதுச் செயலாளர் ஒ.எம். அப்துல் ஸலாம் கூறினார்.
இமாம்ஸ் கவுன்சில் தேசிய தலைவர் மவ்லானா உஸ்மான் பேக் முக்கிய உரை நிகழ்த்தினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உ.பி. மாநில தலைவர் வஸீம் அஹ்மத், சவுதரி முஹம்மது முர்தஸா, மவ்லானா முஹம்மது ஷாபாத் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இரண்டு கம்பளி போர்வை, ஒரு பக்கெட், வீட்டு உபகரணங்கள் ஆகியவை அடங்கிய கிட் 200 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.
14 கிராமங்களில் 3000 குடும்பத்தினருக்கு இவ்வாரத்திற்குள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கிட்டுகளை வழங்கும்.

- Thoothu online.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza